கெஜ்ரிவால் ஏன் இந்து, இந்துத்துவாவை வெறுக்கிறார் என புரியவில்லை - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் இந்து, இந்துத்துவாவை வெறுக்கிறார் என புரியவில்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.;

Update:2022-10-08 12:22 IST

புதுடெல்லி,

டெல்லி ஆம் ஆத்மி அரசில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் ராஜேந்திர பால் கௌதம். இவர் கடந்த 5-ந் தேதி டெல்லியில் பௌத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் பௌத்த சமயத்திற்கு மாறினார்.

அப்போது இந்து மதக்கடவுள்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, எனவே அவர்களை வணங்க மாட்டேன் என ஆம் ஆத்மி மந்திரி கௌதம் உறுதிமொழி எடுத்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் இந்து, இந்துத்துவாவை வெறுக்கிறார் என புரியவில்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கும்பல் ஏன் இந்து மற்றும் இந்துத்துவத்தை மிகவும் வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணம் எனக்கு உண்மையில் புரியவில்லை.

ராகுல் காந்தியை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால்... "இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்