இலவசங்களையும் நலத்திட்டங்களையும் ஒன்றாக கருத வேண்டாம் - சுப்ரீம் கோர்ட்டு
இலவசங்களையும் நலத்திட்டங்களையும் ஒன்றாக கருத வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
இலவசங்களையும் நலத்திட்டங்களையும் ஒன்றாக கருத வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. தேர்தலை ஒட்டி அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு எதிராக பாஜக வக்கீல் அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கும் அரசு நலத்திட்டங்களும் இலவசம் என்று கூறமுடியுமா என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார்.
மேலும் பல்வேறு எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்டு இலவசங்களையும் நலத்திட்டங்களையும் ஒன்றாக கருத வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.