புண்ணிய கோடி தத்து திட்டத்திற்கு நன்கொடை: கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.11 ஆயிரம் பிடித்தம்

புண்ணிய கோடி தத்து திட்டத்திற்கு நன்கொடையாக கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.11 ஆயிரம் பிடித்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-11-16 21:41 GMT

பெங்களூரு: கர்நாடக அரசின் கால்நடைத்துறை, வயதான மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் 'புண்ணிய கோடி தத்து' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் மாடுகளை தத்தெடுத்து அவற்றை பராமரிக்க நன்கொடை அளிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு ஊழியர்கள் நன்கொடை வழங்குவதாக அறிவித்தனர். இதற்காக மாநில அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி அரசு ஊழியர்களின் நடப்பு நவம்பர் மாதத்தில் ஏ பிரிவு அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.11 ஆயிரமும், பி பிரிவு ஊழிர்களின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.4 ஆயிரமும், சி பிரிவு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.400-ம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புண்ணியகோடி தத்து திட்டத்திற்கு சுமார் ரூ.100 கோடி நன்கொடை கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்