பீட்சா மாவுக்கு அருகே கழிவறை மாப், ஸ்டிக்: பீட்சா பிரியர்கள் அதிர்ச்சி- வைரலாகும் புகைப்படம்

பீட்சா மாவு டிரே அருகே கழிவறையை சுத்தம் செய்யும் பிரஷ் போன்றவை இருந்தது.;

Update: 2022-08-16 11:45 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் பீட்சா உணவகத்தில், பீட்சா மாவு வைக்கப்பட்டிருந்த டிரே அருகே கழிவறை சுத்தம் செய்யும் பிரஷ் மற்றும் மாப் தொங்க விடப்பட்டிருப்பதாக புகைப்படத்துடன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் பானிபூரி தாயாரிப்பது குறித்து இணையத்தில் வெளியான ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு இளைஞர் பானிபூரி செய்யப் பயன்படும் மாவுமீது ஏறிநின்று மிதிக்கும் காட்சி இருந்தது. இது பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் பீட்சா கடையில் பீட்ஸா தயாரிக்கப்படும் மாவு டிரே சுகாதாரமில்லாமல் இருக்கும் புகைப்படத்தை நெட்டிஸன் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த மாவு டிரே மீது, தரையைத் துடைக்க உதவும் பிரஷ், கழிவறையை சுத்தம் செய்யும் பிரஷ், போன்றவை இருந்தது.

இந்தப் புகைப்படங்களை ஷாகில் கர்நானி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், " இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸாக்கள் புத்தம் புது பீட்ஸாகளா தயாரிக்கப்படுகிறாதா" எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த புகைப்படங்களுக்கு டோமினோஸ் பீ்ட்சா நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் " எங்கள் பீட்சாக்கள் எப்போதுமே உலகத் தரம்வாய்ந்தவை. தரமான சூழலில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறி்த்து அந்தக் கடைக்காரரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பீட்சாவின் தரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றில் எப்போதும் சமரசம் இல்லை"எனத் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்