ஒடிசா: உள்நாட்டு க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி

டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2024-04-18 16:17 GMT

image credit: @DRDO_India

புவனேஸ்வர்,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி தொழில்நுட்ப க்ரூஸ் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இச்சோதனையின் போது, அதன் அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்த்தபடி செயல்பட்டன. பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த சோதனை மையத்தால் நிறுவப்பட்ட ரேடார், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம், டெலிமெட்ரி போன்ற பல்வேறு சென்சார்களால் ஏவுகணை செயல்திறன் கண்காணிக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் சுகோய் -30-எம்கே-ஐ விமானத்தில் இருந்தும் ஏவுகணை பறப்பது கண்காணிக்கப்பட்டது.

இந்த ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்