டாக்டர் பலாத்கார வழக்கு; சஞ்சய் ராயின் கை, தொடை பகுதிகளில் கீறல்கள்...

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டருக்கு எதிரான பலாத்காரத்தின்போது, அவர் எதிர்த்து போராடியிருக்கிறார் என்பதற்கான அறிகுறி தெரிய வந்துள்ளது.

Update: 2024-08-27 15:45 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் விசாரணை நிறைவடைந்து உள்ளது. அதன் அறிக்கை கோர்ட்டில் பின்னர் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

சம்பவம் நடந்த பின்னர், சஞ்சய் ராய் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர் என்ற தகவலை நண்பர் ஒருவர் ராயிடம் கூறியிருக்கிறார். அப்போது கூட அவர் அசராமல் இருந்துள்ளார். இந்நிலையில், சஞ்சய் ராய்க்கு நடந்த மருத்துவ அறிக்கை விவரம் ஒன்று வெளிவந்துள்ளது.

அதில், ராயின் கைகள், தொடை பகுதிகளில் கீறல்கள் ஏற்பட்டு உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், பாலியல் வன்முறை தாக்குதலின்போது, பாதிக்கப்பட்ட நபர் எதிர்த்து போராடியிருக்கிறார் என்பதற்கான அறிகுறி தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்