சட்டசபை படிக்கட்டுகளை மண்டியிட்டு வணங்கிய டி.கே.சிவக்குமார்
சட்டசபை படிக்கட்டுகளை மண்டியிட்டு வணங்கிய டி.கே.சிவக்குமார்.
கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றுள்ளார். அவரை தொடர்ந்து துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார், 8 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் விதானசவுதாவுக்கு (சட்டசபை) வந்தனர். அப்போது முதலில் சித்தராமையா விதானசவுதா படிக்கட்டுகளில் ஏற்றிச் சென்றார். அவருடன் வந்த டி.கே.சிவக்குமார் சிறிது நேரம் காத்திருந்து,
விதானசவுதா பட்டிக்கட்டுகளில் மண்டியிட்டு தலைதாழ்த்தி வணங்கி தொட்டு கும்பிட்டார். பின்னர் இரு விரல்களை உயர்த்தியும், வெற்றி முத்திரை காட்டியும் விதானசவுதா படிக்கட்டுகளில் ஏறி சென்றார். காங்கிரஸ் கட்சி மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாக முதல் தடவையாக பதவி ஏற்றதால், அவர் விதானசவுதா படிக்கட்டுகளை தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.