காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா டி.கே.சிவக்குமார்?

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்பது குறித்து டி.கே.சிவக்குமாரே பதில் அளித்துள்ளார்.

Update: 2023-05-16 21:27 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் சித்தராமையாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள டி.கே.சிவக்குமார், தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின. இதுகுறித்து டெல்லியியில் அவரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், "நான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் பொய்யானது. நான் எதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கட்சி தாயை போன்றது. கட்சி மேலிடத்திடம் நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்