இந்தியாவில் 100% தூய்மையான ஆற்றல் பயன்பாட்டில் டையூ மாவட்டம்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் அனைத்து பகல்பொழுது தேவைகளுக்காக 100% தூய்மையான ஆற்றலை டையூ மாவட்டம் பயன்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி பெருமிதமுடன் குறிப்பிட்டார்.

Update: 2023-03-26 07:04 GMT



புதுடெல்லி,


பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் பின்பு, மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி வழியே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

இதனை முன்னிட்டு இந்த மாதத்திற்கான 99-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, தூய்மையான ஆற்றல் பிரிவு பற்றி தற்போது உலக அளவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சூரிய ஆற்றல் துறையில் இந்தியா விரைவாக முன்னேறி வருகிறது. இது ஒரு பெரிய சாதனை ஆகும்.

இந்தியாவில் அனைத்து பகல்பொழுது தேவைகளுக்காகவும் 100% தூய்மையான ஆற்றலை டையூ மாவட்டம் பயன்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி பெருமிதமுடன் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவருக்கும் ஆன வளர்ச்சி என்ற மனஉறுதியானது, இந்தியாவின் சூரிய திட்ட செயல்பாட்டை முன்னோக்கி எடுத்து செல்கிறது என அவர் கூறியுள்ளார்.

இந்திய விமான படையில், போர் படை பிரிவில் தளபதி அளவிலான அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் குரூப் கேப்டன் ஷாலிஜா தமி ஆவார். அவர் 3 ஆயிரம் மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.

அவரை போன்றே, உலகின் மிக உயரம் வாய்ந்த சியாச்சின் பனிமலை பகுதியில், இந்திய ராணுவத்தில் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கேப்டன் சிவா சவுகான் ஆவார்.

இதேபோன்று, ஆசியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநர் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெறுகிறார். அவர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதன் பெண் ஓட்டுநராகவும் உள்ளார் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்