2023-24-ம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 10.5 சதவீதம் அதிகரிக்கும் - பட்ஜெட்டில் கணிப்பு

தனிநபர் வருமான வரி மற்றும் கார்பரேட் வரி அடங்கிய நேரடி வரி வருவாய் ரூ.18.23 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

Update: 2023-02-01 23:57 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 2023-24-ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் கணிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி தனிநபர் வருமான வரி மற்றும் கார்பரேட் வரி அடங்கிய நேரடி வரி வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்து ரூ.18.23 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டின் வரி வருவாய் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் ரூ.16.50 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.

இதுவும் முந்தைய ஆண்டை (2021-22) விட 17 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைப்போல 2023-24-ம் ஆண்டுக்கான சுங்கவரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2.33 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் பட்ஜெட்டில் கணிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்