குளத்தில் முழ்கி இளம்பெண் உயிரிழப்பு

புத்தூர் அருகே குளத்தில் முழ்கி இளம்பெண் உயிரிழந்தார்.

Update: 2022-10-09 19:00 GMT

மங்களூரு;


  தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா அரசிகெட்டே பகுதியை சேர்ந்தவர் ராஜவர்மா. இவரது மகள் சுரக்‌ஷா(வயது 23). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சுரக்‌ஷா தனது குடும்பத்துடன் தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்துக் கரையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சுரக்‌ஷா குளத்தில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர், உடனடியாக சுரக்‌ஷாவை காப்பாற்ற குளத்தில் குதித்தார்.

ஆனால் அதற்குள் சுரக்‌ஷா நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்த அவரது தந்தை ராஜவர்மா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். தற்போது அவர் மணிபால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்