வைர முடி செலுவநாராயணசாமி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் வைர முடி செலுவநாராணசாமி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2023-04-01 21:35 GMT

மண்டியா:-

வைரமுடி திருவிழா

மண்டியா மாவட்ட மேல்கோட்டையில் பிரசித்தி பெற்றது செலுவநாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வைர முடி உற்சவம் திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. வருகிற 8-ந் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் விழாவில் சிகர நிகழ்ச்சியான வைர முடி உற்சவம் நேற்று நடந்தது. முன்னதாக மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த வைர முடி மற்றும் ராஜமுடி வெளியே எடுத்துவரப்பட்டது. பின்னர் அந்த வைர முடி மற்றும் ராஜ முடியை கோவில் கருவூலத்தின் நுழைவாயிலில் வைத்தனர். அப்போது அந்த வைர முடி மற்றும் ராஜ முடிக்கு, மாலை அணிவித்து பாரம்

பரிய முறைப்படி சிறப்பு பூஜை செய்தனர். 15 நிமிடம் இந்த பூைஜ நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் மாவட்ட கலெக்டர் கோபால கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் அந்த வைர முடி மற்றும் ராஜ முடியை தொட்டு வணங்கி தரிசனம் செய்தனர்.

ஊர்வலமாக எடுத்து சென்றனர்

இதை தொடர்ந்து அந்த வைர முடி, மற்றும் ராஜ முடி செலுவநாராயணசாமி கோவில் கரத்தில் வைக்கப்பட்டது. பின்னர் கருவூலத்தில் இருந்து இந்த வைர முடி ஊர்வலம் புறப்பட்டது. பூஜை குனிடா, டோல்லு குனிடா, கருடி கோம்பை, வீரகாசே, தமடே, கொம்பு கழலே, மங்கலடிகள் ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் அவை எடுத்து வரப்பட்டது. இந்த கரக ஊர்வலத்திற்கு பாண்டவப்புரா தாசில்தார் மற்றும் போலீசார் தரப்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக மைசூரு மடத்தில் உள்ள கரக வாகனத்தின் மூலம் இந்த வைர மற்றும் ராஜ முடி எடுத்து செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அதேபோல எடுத்து வரப்பட்டது. முன்னதாக இந்த வைர, ராஜ முடி ஊர்வலம் கருவூலத்தையடுத்த மேல்கோட்டை லட்சுமி ஜனார்த்தனசாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

86 கிராமத்தினர் வழிப்பட்டனர்

அங்கு வைர, ராஜ முடிக்கு சிறப்பு வரவேற்பு மற்றும் பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து சீனிவாச சாமி கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பெண்கள் வைர, மற்றும் ராஜ முடிக்கு சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து இந்த ஊர்வலம், இந்துவாலு, சுண்டஹள்ளி, தூபினகெரே, காலேனஹள்ளி, கணங்கூர், பாபுராயனகொப்பலு, கிராங்கூர், பெட்டதஹள்ளி, ஜக்கனஹள்ளி உள்பட 86 கிராமங்கள் வழியாக மேல்கோட்டையை வந்தடைந்தது. இதற்கிடையில் அனைத்து கிராமங்களில் ரங்கோலி, திருக்கரங்கள், தோரணங்கள், சப்பரங்கள் வைத்து, சிறப்பு வரவேற்பு அளித்தனர். மேலும் ஆங்காங்கே பானகம் மற்றும் தண்ணீர், மோர் ஆகிய பானகம் வழங்கப்பட்டது. இதையடுத்து இறுதியாக மேல்கோட்ைட செலுவநாராயணசாமி கோவிலை இந்த வைர, ராஜ முடி ஊர்வலம் வந்தடைந்தது.

சாமிக்கு அணிவிக்கப்பட்டது

பின்னர் அந்த வைர மற்றும் ராஜ முடியை எடுத்து, சாமிக்கு அணிவித்த கோவில் பூசாரிகள், சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை தரிசனம் செய்தனர். இதனால் மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவில் வளாகமே விழாகோலம் பூண்டு காணப்பட்டது. இதற்கிடையில் வைர முடி சாமிக்கு அணிவிக்கப்பட்டிருப்பதால், கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்