வயநாடு நிலச்சரிவை பார்வையிட்ட மோகன்லால் குறித்து அவதூறான பேச்சு; யூ-டியூபர் கைது

மோகன்லால் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரள யூ-டியூபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-08-10 11:10 GMT

Image Courtesy : PTI

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூ-டியூபர் அஜு அலெக்ஸ். இவர் தனது யூ-டியூப் சேனலில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில், வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற மலையாள நடிகர் மோகன்லால் குறித்து அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசாரிடம் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான சித்திக் புகார் அளித்தார். அந்த புகாரில், கவுரவ லெப்டினண்ட் கர்னல் என்ற அடிப்படையில் நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யூ-டியூபர் அஜு அலெக்ஸ் மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நடிகர்கள் குறித்து தொடர்ந்து அவதூறான வகையில் கருத்து பதிவிட்டு வருவதாக சித்திக் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்திக் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லா போலீசார் யூ-டியூபர் அஜு அலெக்ஸை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்