அரியானா மோதல் சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர் தகவல்
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், நூஹ் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.
அரியானா,
அரியானா மாநிலம் நூஹ் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹரியானாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மோதலின்போது இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டதுடன், 12 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள், குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், நூஹ் காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் தெரிவித்தார்.