டெல்லியில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
டெல்லி,
நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.
அதேபோல், கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளம் தெரியாதவகையில் பனிமூட்டம் இருப்பதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு விமானங்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, பனிமூட்டம் அதிகரித்துள்ளபோதும் டெல்லியில் காற்றின் தரம் சற்று அதிகரித்துள்ளது.