மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்...!
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் 4 வரை விசாரணைக்காவல் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்தது. புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த நிலையில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தநிலையில் மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி சிபிஐ அனுமதி கோரியநிலையில்,
மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மணிஷ் சிசோடியாவை மார்ச் 4-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.