தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம்

தேசிய தலைநகரில் இன்று காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது.;

Update: 2022-12-08 07:03 GMT

புது டெல்லி,

தேசிய தலைநகரில் இன்று காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் கண்டது. ஆனால் அது இன்னும் "மோசமான" பிரிவிலேயே உள்ளது. அதே நேரம் குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியசாக இருந்தது.

இது பருவத்தின் சராசரியை விட குறைவாக உள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி தலநகர் டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 262 ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்