டெல்லிக்கு உரிய தண்ணீரை வழங்கக்கோரி ஆம் ஆத்மி பெண் மந்திரி காலவரையற்ற உண்ணாவிரதம்

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முன்னிலையில் அதிஷி சிங் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.;

Update: 2024-06-21 19:42 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. டெல்லிக்கு அரியானா மாநிலம் உரிய அளவு தண்ணீரை திறந்துவிடக்கோரி, குடிநீர் இலாகாவை கவனிக்கும் டெல்லி ஆம் ஆத்மி பெண் மந்திரி அதிஷி சிங் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தெற்கு டெல்லியில் போகல் பகுதியில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முன்னிலையில் அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். டெல்லி மந்திரி சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

உண்ணாவிரதத்தில், சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பிய செய்தியை சுனிதா கெஜ்ரிவால் வாசித்தார். முன்னதாக, டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், அதிஷி சிங், சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்