புதுடெல்லி,
டெல்லியில் நங்கோலி பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 27 ஆம் தேதி மாணவர்கள் வழக்கம் போல், வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது, வகுப்பறையில் ஓடிக்கொண்டு இருந்த சீலிங் ஃபேன் (காற்றாடி) கழன்று மாணவர் ஒருவரின் தலையில் விழுந்துள்ளது. இதில் காயம் அடைந்த மாணவர் உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வகுப்பறையின் கான்கீரிட் சேதம் அடைந்து இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், இது குறித்து பள்ளியின் அதிகாரிகளோ, அரசு தரப்பிலோ இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை.