டெல்லி; கொரோனா களபணியில் உயிரிழந்த நபர்களுக்கு தலா ரூ.1 கோடி: மணீஷ் சிசோடியா

டெல்லியில் கொரோனா களபணியின்போது, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என மணீஷ் சிசோடியா அறிவித்து உள்ளார்.

Update: 2023-01-14 01:16 GMT


புதுடெல்லி,


டெல்லியில் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தலைமையில் மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் பேசிய சிசோடியா, டெல்லியில் பெருந்தொற்றின்போது, தங்களது உயிரை பற்றி கவனம் கொள்ளாமல் மனிதஇனம் மற்றும் சமூகம் பாதுகாக்கப்பட கொரோனாகால களப்பணியாளர்கள் சுயநலமின்றி பணியாற்றி, உயிர் தியாகம் செய்துள்ளனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவொரு தொகையும் இழப்பீடு செய்யாது. ஆனால், இந்த தொகையை பெறுவதன் வழியே அவர்கள் ஒரு கண்ணியமிக்க வாழ்வை வாழ்வதற்கான அர்த்தம் நிச்சயம் ஏற்படும்.

கொரோனா களப்பணியாளர்களின் குடும்பத்தினரின் ஒவ்வொரு தேவைக்கும் அரசு துணையாக நிற்கும் என்று தெரிவித்து உள்ளார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இதன்படி, கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, கொரோனா நோயாளிகள் மற்றும் சமூகத்திற்கு கள பணியாற்றி உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியை டெல்லி அரசு வழங்கும் என மணீஷ் சிசோடியா அறிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்