இந்தியா-இத்தாலி உறவுகளை மேம்படுத்த டெல்லி-ரோம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!
இது இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு உறவுகளை மேம்படுத்தும்.
புதுடெல்லி,
இத்தாலி தலைநகர் ரோம் - புதுடெல்லி இடையே நேரடி விமான சேவையை இத்தாலியின் ஏர் டிரான்ஸ்போர்ட் (ஐடிஏ) விமான சேவை நிறுவனம், டிசம்பர் 3ம் தேதி(நேற்று) முதல் தொடங்கியது.அதிக இந்திய பயணிகளை இத்தாலிக்கு அழைத்து வர வேண்டும் இந்த புதிய சேவையை விமான நிறுவனம் தொடங்கியது.
இந்நிலையில், இதுகுறித்து இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் வின்சென்ட் டெலூகா கூறியதாவது, "டெல்லி- ரோம் இடையே இத்தாலி ஏர் டிரான்ஸ்போர்ட் (ஐடிஏ) நிறுவனத்தின் நேரடி விமானம் இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான இணைப்பிற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரித்து வருகிறோம்.இது இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு உறவுகளை மேம்படுத்தும்" என்றார்.