டெல்லியில் மேலும் 813- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 813- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவல் உயரத்தொடங்கியுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 813- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 15,339- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.தொற்று பரவல் விகிதம் 5.30 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 1,021- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,703- ஆக உள்ளது.