டெல்லியில் கனமழை: கட்டிடம் இடிந்து விபத்து - ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல்

டெல்லி சப்ஜி மண்டி பகுதியில் கனமழை காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

Update: 2024-07-31 20:26 GMT

புதுடெல்லி,

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று இரவு டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இரவு 8.57 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல தாமதமானது. ஏராளமானோர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Tags:    

மேலும் செய்திகள்