ஷரத்தா கொலை வழக்கு: 37 பெட்டிகளில் பொருட்களை எடுத்து சென்ற அப்தாப்- வெளியான புது தகவல்

ஷரத்தா கொலை வழக்கில் கைதான காதலன் அப்தாப் அமீன் கடந்த ஜூன் மாதம் வசாயில் உள்ள வீட்டில் இருந்து 37 பெட்டிகளில் பொருட்களை எடுத்து சென்றது தெரியவந்து உள்ளது.

Update: 2022-11-21 13:14 GMT

மும்பை,

வசாயை சேர்ந்த கால்சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா, அதே பகுதியை சேர்ந்த அப்தாப் அமீனை காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2 பேரும் திருமணம் செய்யாமல் கடந்த சில ஆண்டுகளாக வசாயில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை மாணிக்பூர் போலீசில் புகார் அளித்தார்.

புகார் டெல்லி போலீசாருக்கு மாற்றப்பட்டது. டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் அப்தாப் அமீன் கடந்த மே மாதம் டெல்லியில் உள்ள வீட்டில் ஷரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் ஷரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, கடந்த சில மாதங்களாக உடல் துண்டுகளை வனப்பகுதியில் தூக்கி எறிந்து வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்தாப் அமீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வந்த டெல்லி போலீசார் ஷரத்தாவின் நண்பர்கள் , குடும்பத்தினர் மற்றும் பக்கத்துவீட்டுக்காரர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த ஜூன் மாதம் அப்தாப் அமீன் வசாயில் உள்ள வீட்டில் இருந்து 37 பெட்டியில் பொருட்களை அள்ளி சென்றது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக விசாரணையில் தெரியவந்ததாவது:- அப்தாப் அமீனும், ஷரத்தாவும் வசாய் எவர்சைன் சிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்து உள்ளனர். டெல்லிக்கு குடிபெயர திட்டமிட்ட போது, வீட்டை காலி செய்ய யார் பணம் கொடுப்பது என்பது தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஷரத்தா கொலை செய்யப்பட்ட பிறகு, அப்தாப் அமீன் வசாயில் உள்ள வீட்டில் இருந்த பொருட்களை 37 பெட்டிகளில் டெல்லுக்கு கொண்டு சென்று உள்ளார். குட்லக் பேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் அவர் பொருட்களைஎடுத்து சென்று இருக்கிறார். இதற்காக அவர் ரூ.20 ஆயிரம் கட்டணம் செலுத்தியது தெரியவந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்