தற்கொலை முயற்சியை இன்ஸ்டாவில் லைவ் வீடியோ வெளியிட்ட நபர் - தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய போலீசார்

தற்கொலை முயற்சியை அந்த நபர் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Update: 2023-09-22 23:09 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் ஷாரதா பகுதியை சேர்ந்த 28 வயது நபருக்கு மனைவி உள்ளார். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக அந்த நபரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அந்த நபர் மட்டும் வீட்டில் தனியே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்ட அந்த நபர் நேற்று தன் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தார். கத்தியால் தற்கொலை செய்துகொள்வதாக கூறி இது தொடர்பாக அந்த நபர் தற்கொலை செய்வதை இன்ஸ்டாகிராமில் லைவ் செய்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் லைவ் வை பார்த்து அதிர்ச்சியடந்த அந்த நபரின் சகோதரி உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றினர். தற்கொலைக்கு முயன்றபோது அந்த நபருக்கு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்