உயிர்காக்கும் முக்கிய மருந்துகளுக்கு 5 மாதங்களாக தட்டுப்பாடு - டெல்லியில் எய்ட்ஸ் நோயாளிகள் போராட்டம்!

தலைநகர் டெல்லியில் எச்ஐவி நோயாளிகள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-26 05:59 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் எச்ஐவி நோயாளிகள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். எய்ட்ஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் போதிய அளவில் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து போராட்டக்காரர்களில் ஒருவர் கூறுகையில், எச்ஐவி நோயாளிகளுக்கு தேவைப்படும் உயிர் காக்கும் முக்கிய மருந்துகள் இல்லை. டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் கடந்த ஐந்து மாதங்களாக இதே நிலை தொடர்கிறது. நாங்கள் இது குறித்து மாநில அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

இன்னொரு எய்ட்ஸ் நோயாளி கூறுகையில், மருந்துகள் இப்போது கையிருப்பில் இல்லை, பற்றாக்குறையும் நிலவுகிறது. இத்தகைய மருந்துகள் இல்லை என்றால் இந்தியா எப்படி எச்ஐவி தொற்று இல்லாத ஒரு நாடாக மாறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்