குதுப்மினார் மசூதியில் தொழுகைக்கு விதித்த தடை உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோர்ட்டு மறுப்பு

குதுப்மினார் வளாகத்தில் அமைந்துள்ள முகாலய மசூதிக்குள் தொழுகை நடத்த தடை செய்து இந்திய தொல்லியல் துறை கடந்த மாதம் ஆணை பிறப்பித்தது.

Update: 2022-06-06 09:30 GMT

புதுடெல்லி,

குதுப்மினார் வளாகத்தில் அமைந்துள்ள முகாலய மசூதிக்குள் நுழையவும் தொழுகை நடத்தவும் தடை செய்து இந்திய தொல்லியல் துறை கடந்த மாதம் ஆணை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து, டெல்லி கோர்ட்டில் மசூதி நிர்வாக கமிட்டி தாக்கல் செய்தது.

இது தொடர்பாக, மசூதி நிர்வாக கமிட்டி, கோர்ட்டில் முன்வைத்த வாதத்தில் கூறப்பட்டதாவது, 'குதுப்மினார் மசூதியில் மக்கள் வழக்கம்போல தொழுகை நடத்தி வந்தனர். ஆனால், மசூதிக்குள் தொழுகை நடத்த கடந்த மாதம் திடீரென தடை விதிக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிட டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. 


முன்னதாக, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, டெல்லி ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை அவசரமாகப் பட்டியலிட மறுத்துவிட்டது. இந்த குறிப்பை மேஏர்கோள் காட்டி, நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி தலைமையிலான அமர்வு, இன்று மீண்டும் அதே உத்தரவை பிறப்பித்தது. அதாவது,இந்த வழக்கை அவசரமாகப் பட்டியலிட வேண்டுமென்று தொடரப்பட்டதை நிராகரித்தது, இதனை அவசர வழக்காக விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று கூறியது.

Tags:    

மேலும் செய்திகள்