உ.பி.: சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி; 2 பேர் காயம்

உத்தர பிரதேசத்தில் மதுரா நகரில் யமுனா விரைவு சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள்.;

Update:2025-03-16 08:54 IST
உ.பி.:  சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி; 2 பேர் காயம்

மதுரா,

உத்தர பிரதேசத்தில் மதுரா நகரில் யமுனா விரைவு சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், தானா நவுஜீல் பகுதியில் சென்றபோது, காரின் டயர் திடீரென வெடித்து உள்ளது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த காரில் பயணித்தவர்கள் விஷாம்பர் பகுதியில் இருந்து ஜீவார் நோக்கி சென்று கொண்டிருந்தனர். விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்