இங்கிலாந்தில் குடியேற உதவுவதாக வாக்குறுதி அளித்து ரூ. 20.46 லட்சம் மோசடி
இங்கிலாந்திற்கு குடியேற உதவுவதாக வாக்குறிதி அளித்துவிட்டு ரூ. 20.46 லட்சத்தை ஏமாற்றிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

காந்திநகர்,
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் டஹேகாம் நகரைச் சேர்ந்த பங்கஜ் படேல் என்பவர் அங்கு ஆட்டோமொபைல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரையும் இவரது மனைவியையும் சந்திக்க உறவினரான தொழிலதிபர் ஹஸ்முக் படேல் வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த நபர் பங்கஜ் மற்றும் அவரது மனைவி இருவரையும் இங்கிலாந்துக்கு குடியேற உதவுவதாக பொய்யான வாக்குறுதி அளித்தார். மேலும் அங்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்தார்.
பின்னர் ரூ. 32 லட்சத்தை கொடுங்கள் இருவரையும் லண்டனுக்கு அனுப்பி வைக்கிறேன் என உறுதியளித்தார். அப்படியில்லை என்றால் முழுபணமாக இல்லாமல் மாதம் மாதம் பணத்தை டெபாசிட் செய்யுங்கள் எனக்கூறி பணத்தை பெற்றுக்கொண்டார். இதுவரை தம்பதியினர் ஜூலை 2022 முதல் ஜனவரி 2024 வரை பணத்தை டெபாசிட் செய்தனர்.
இதனால் முதற்கட்டமாக ரூ. 6.50 லட்சம் பணத்தை உறவினரிடம் டெபாசிட் செய்தார். பின்னர் பணம் அனைத்தையும் பிரிட்டிஷ் பவுண்டுகளில் மாற்றியதாக கூறி மூன்று நாட்களுக்கு பிறகு ரூ. 3.5 லட்சத்தையும் ரொக்கமாகவும், விசா விற்வாக அசல் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த உறவினர் பணத்தை எடுத்துக்கொண்டு உங்களுடைய வேலை விஷயமாக லண்டன் செல்வதாக கூறி லண்டனுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினர் எந்த பதிலும் சரியாக அளிக்காத நிலையில் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதனால் உறவினர் மேலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து சில போலி ஆவணங்களை காட்டி மேலும் ரூ. 7.5 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு அவர நிலை காரணமாக லண்டனுக்கு செலவதாகக்கூறிய பின்னர் அவருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தார். உறவினரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் தான் ஏமாற்றப்பட்ட தம்பதியினர் மனம் உடைந்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.