டெல்லி: எல்.இ.டி. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
டெல்லியில் உள்ள எல்.இ.டி. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் 'முண்ட்கா' தொழிற்சாலை பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சுமார் 35 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.