சாதாரண பாஸ்போர்ட் கோரி ராகுல்காந்தி மனு: சுப்பிரமணிய சாமி பதில் அளிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவு

சாதாரண பாஸ்போர்ட் கோரி ராகுல்காந்தி அளித்த மனு தொடர்பாக சுப்பிரமணிய சாமி பதில் அளிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2023-05-24 18:48 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவுடன் எம்.பி. பதவியை இழந்தார். அத்துடன், தனது சிறப்பு பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தார்.

இதற்கிடையே, தனக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கக்கோரி, பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

எனவே, தனக்கு அனுமதி கோரியும், பாஸ்போர்ட் வழங்க கோர்ட்டு தடையில்லா சான்றிதழ் அளிக்கக் ேகாரியும் டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல்காந்தி மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு, மாஜிஸ்திரேட்டு வைபவ் மேத்தா முன்பு விசாரணைக்கு வந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கின் புகார்தாரரான பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, பதில் அளிக்க அவகாசம் கோரினார். அதை ஏற்று, 26-ந்தேதிக்குள் எழுத்துபூர்வமான பதில் அளிக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்