டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடக்கம்

டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2023-03-05 12:30 GMT

டெல்லி,

டெல்லி சட்டசபையின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்.

டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் கூறி சி.பி.ஐ. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. சி.பி.ஐ. நடவடிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் தான் வகித்து வந்த துறை முதல்-மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார்.

மேலும மந்திரிசபையில் அங்கம் வகித்து வந்த சத்யேந்திர ஜெயின் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து வந்த இலாகா மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்தார்.

இந்த நிலையில் இருவரின் ராஜினாமாவையடுத்து மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள் ஆம் ஆத்மியை சேர்ந்த வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் மற்றும் சமூக நலத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இல்லாமல் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதிதாக ஒதுக்கப்பட்ட துறைகளை பொறுப்பேற்ற ஆம் ஆத்மி மந்திரி கைலாஷ் கெலாட் இந்த முறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அவருக்கு நிதி, திட்டமிடல், பொதுப்பணி (PWD), மின்சாரம், உள்துறை, நகர்ப்புற மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, மற்றும் நீர் துறைகள் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்