ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்களிடம் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு சென்ற மேற்கு வங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தம் டெல்லி, அசாம் போலீசார் மீது குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுமார் ரூ.50 லட்சத்துடன் சமீபத்தில் மேற்கு வங்காள போலீசாரிடம் சிக்கினர்.

Update: 2022-08-05 00:13 GMT

கொல்கத்தா, 

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுமார் ரூ.50 லட்சத்துடன் சமீபத்தில் மேற்கு வங்காள போலீசாரிடம் சிக்கினர். அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார், 3 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தை மேற்கு வங்காள குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சென்ற அதிகாரிகளை டெல்லி மற்றும் கவுகாத்தியில் உள்ளூர் போலீசார் தடுத்து நிறுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, கைது செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமான ஒருவரது இடத்தில் சோதனையிடுவதற்கு தகுந்த வாரண்டுடன் டெல்லிக்கு சென்ற அதிகாரிகளை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதைப்போல அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் அந்த மாநில போலீசார் தங்களை தடுத்து நிறுத்தியதாகவும், இதற்கு மாநில பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் காரணம் எனவும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால் இந்த குற்றச்சாட்டை அசாம் போலீசார் மறுத்துள்ளனர். மேற்கு வங்காள போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், தாங்கள் வழங்கிய வாகனத்தில்தான் அவர்கள் விசாரணைக்கு சென்றதாகவும் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்