டெல்லியில் மாணவி மீது திராவகம் வீச்சு: ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

டெல்லியில் மாணவி மீது திராவகம் வீசிய சம்பவம் தொடர்பாக ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2022-12-15 18:55 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லியில் துவாரகா பகுதியில் நேற்று முன்தினம் பிளஸ்-2 மாணவி மீது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திராவகம் வீசி தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே, இச்சம்பவம் பற்றி விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம், டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், மாணவி மீது வீசப்பட்ட திராவகம், பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத்தளத்தில் வாங்கப்பட்டது எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நிறுவனத்துக்கும், அமேசான் விற்பனை தளத்துக்கும் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

திராவகத்தை ஆன்லைனில் எளிதாக வாங்க முடிவது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ள ஆணையம், அதனை அரசின் ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் விற்பனையோடு இணைக்க அனுமதித்தது யார்? எனவும் கேள்வி கேட்டுள்ளனர். வருகிற 20-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்