சிறையிலிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் - 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
டெல்லியின் மண்டோலி சிறையிலிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் மண்டோலி சிறையிலிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இதுதொடர்பாக துணை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டன் லோகேஷ் தாமா, வார்டன் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிறைத்துறை பொது இயக்குனர் சஞ்சய் பானிவால் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தேடுதல் குழுக்களை உருவாக்கவும், அவர்களின் சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறியவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
சிறைகளில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.