அயோத்தியில் யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் கட்டிய பாஜக தொண்டர்- தினமும் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை

இக்கோவிலில் வில் அம்புடன் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சிலை காட்சி அளிக்கிறது.

Update: 2022-09-19 15:07 GMT

Image Courtesy: ANI 

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வசிக்கும் பாஜக தொண்டர் ஒருவர், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பணியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அயோத்தி மாவட்டத்தில் அவருக்கு கோயில் கட்டியுள்ளார்.

பிரபாகர் மவுரியா என்ற அந்த நபர் இக்கோயிலை பைசாபாத்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் பாரத்குண்ட் பகுதியில் கட்டியுள்ளார். இந்த இடம் ராமர் 14 ஆண்டுகால வனவாசம் செல்வதற்கு முன்பு அவரின் சகோதரரான பரதனிடம் விடைபெற்ற இடமாக நம்பப்படுகிறது.

இக்கோவிலில் வில் அம்புடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சிலை காவி உடையில் காட்சி அளிக்கிறது. யோகி ஆதித்யநாத் சிலை 20 அடி உயரத்தில் ஒளிவட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபாகர் மவுரியா தினமும் இரண்டு முறை முதல் மந்திரி சிலைக்கு சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்.

இது குறித்து பேசிய பிரபாகர் மவுரியா, "முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மக்கள் நலப் பணிகளைச் செய்த விதத்தில், அவர் தெய்வம் போன்ற இடத்தைப் பெற்றுள்ளார். அவரது நலப் பணிகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

அதனால்தான் அவருக்கு கோயில் வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ராமர் கோயிலைக் கட்டும் அவருக்கு நாங்கள் கோயிலை கட்டியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்