மராட்டிய மாநிலத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு: கொலையா? என விசாரணை

கடந்த 14 ஆம் தேதியில் இருந்து அவேஷை காணவில்லை என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-11-21 06:36 GMT

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், மும்ப்ராவின் ஜூபிலி பார்க் பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை சிலர் பார்த்தனர். அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதுபற்றி காவல் அதிகாரி கூறியதாவது,

அந்த சிதைந்த உடல் காணாமல் போன அவேஷ் ஷேக் (வயது 18) என்ற இளைஞரின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. அம்ருத் நகர் பகுதியில் வசித்த அவர், ஜூபிலி பார்க் பகுதியில் வசிக்கும் தனது மாமாவைப் பார்ப்பதற்காக வந்திருக்கலாம். கடந்த 14 ஆம் தேதியில் இருந்து அவேஷை காணவில்லை என்றும் தெரியவந்தது.

சடலத்திற்கு அருகில் ஒரு கல் மற்றும் அதனுடன் ஒரு ஜோடி கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

எனவே, அடையாளம் தெரியாத நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ஜூபிலி பார்க் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்