ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது அரசின் கொள்கை விவகாரம் தானே... சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான வாக்குவாதங்களால் இந்த விவகாரம் தற்போது அரசியல் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவின் ராமேஷ்வரம் தீவிற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் கானப்படும் மணல் திட்டுக்கள் ராமர் பாலம் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவின் நெடுங்கால விவாதங்கள் என்ற பட்டியலில் இது அமைகிறது. அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான வாக்குவாதங்களால் இந்த விவகாரம் தற்போது அரசியலாக மாறி பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
மத நம்பிக்கையின் படி அதற்கு சில கருத்துக்கள் இருந்தாலும் கூட அதை தற்காலத்தில் நீதிமன்றங்களின் வாயிலாகவும் தீர்த்துக்கொள்ள முயற்சிகள் நடக்கின்றன.
இதற்கிடையே, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கு தாங்கள் தலையிட வேண்டுமா..? என்றும், இது அரசின் கொள்கை விவகாரம் தானே என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.