பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு
பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு-
கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்துமாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கர்நாடக பால் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. லிட்டருக்கு ரூ.3 உயர்த்துமாறு அந்த அமைப்பு கேட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் இதற்கு முதல்-மந்திரி அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் பால் விலை உயா்வு குறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திர ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்துள்ளோம். 16 பால் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். விரைவில் பால் விலை உயர்த்தப்படும். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அனுமதி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விலை உயர்வை விவசாயிகளுக்கு அப்படியே வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு பாலச்சந்திர ஜார்கிகோளி கூறினார்.