கேரளாவில் முந்திரியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு.!
கேரளாவில் அதிக அளவில் உற்பத்தி செய்துவரும் முந்திரியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் அதிக அளவில் உற்பத்தி செய்துவரும் முந்திரியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, கண்ணூரில் உள்ள பையாவூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் பெனி எனப்படும் முந்திரி மதுபானம் தயாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
ஒரு லிட்டர் பெனியின் உற்பத்தி செலவு 200 ரூபாயாகவும், விற்பனை விலை 500 ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலால் துறையில் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், டிசம்பர் மாதத்திற்குள் பெனி உற்பத்தி தொடங்கப்படலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.