சாலை விரிவாக்கத்திற்காக 3,500 மரங்களை வெட்டி அகற்ற முடிவு; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

மங்களூருவில் சாலை விரிவாக்கத்திற்காக 3,500 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-06-17 15:28 GMT

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பிகர்னகட்டே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சானுர் வரையிலான 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்த சாலையின் ஓரங்களில் உள்ள சுமார் 3,500 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறை அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை அகற்ற முடிவு செய்திருப்பது பற்றி விவாதம் நடந்தது.

அப்போது வனத்துறையினர் கூறுகையில், பிகர்னகட்டே முதல் சானுர் வரையிலான 45 கிலோ மீட்டர் சாலையில் 18½ கி.மீ. வரை உள்ள மரங்கள் வனப்பகுதி எல்லைக்குள் உள்ளது. மீதமுள்ள மரங்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது.

சாலையின் மொத்த அகலம் 45 மீட்டர் என்றும், 45 மீட்டருக்குள் வரும் மரங்களை கண்டறிந்து அதனை மட்டும் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் அந்த மரங்களை வெட்டவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்