புளி குழம்பில் கிடந்த செத்த எலி; உ.பி. மருத்துவ கல்லூரியில் பரபரப்பு

உத்தர பிரதேசத்தில் மருத்துவ கல்லூரியில் புளி குழம்பில் கிடந்த செத்த எலியால் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-06-25 11:27 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் ரமா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதில், அரிசி சாதம், சாம்பார், புளி குழம்பு ஆகியவை தயாராக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புளி குழம்பில் உயிரிழந்த எலி ஒன்று முழுமையாக கிடந்து உள்ளது.

இதனை கண்ட சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ ஒன்றை எடுத்து அதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவர் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த குழம்பில் பெரிய அளவில் காய்கறிகள் எதுவும் இல்லாத நிலையில், முழு அளவிலான செத்த எலி ஒன்று கிடந்தது பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த வீடியோவும் வெளியிடப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. எனினும், இதுபற்றி கல்வி மையம் எந்தவித கருத்தும் கூறவில்லை.

சில நாட்களுக்கு முன்பு, சீனாவின் ஜியாங்சி இண்டஸ்டிரி தொழில்நுட்பவியல் கல்லூரியில் உள்ள கேண்டீனில் வாத்து இறைச்சிக்கு பதிலாக எலியின் தலை இருந்தது கண்டு, மாணவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்