தார்வார் பெண் தற்கொலை; ஆஸ்திரேலியாவில் அக்கம் பக்கத்தினர் தொல்லை கொடுத்தது காரணமா?
தார்வார் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம். அக்கம் பக்கத்தினர் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவர் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.;
உப்பள்ளி:
தார்வார் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம். அக்கம் பக்கத்தினர் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவர் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
பெண் தற்கொலை
தார்வார் மாவட்டம் சப்தாபுராவை சேர்ந்தவர் பிரியதர்ஷின் பட்டேல் (வயது 26). ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் கடந்த 18-ந் தேதி தார்வாருக்கு திரும்பினார். இந்தநிலையில் பிரியதர்ஷினி பெலகாவில் உள்ள சவதத்தி அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 20-ந் தேதி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ெசன்ற போலீசார் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பிரியதர்ஷினி தந்தைக்கு அனுப்பிய கூரியர் ஒன்று கிடைத்தது.
அந்த கூரியரை பிரித்து பார்த்தபோது, ஆஸ்திரேலியாவின் பிரியதர்ஷினின் குடியிருப்பின் அருகே வசித்து வந்த அறை எண் 17, 18, 19, 22 ஆகியவற்றில் வசித்து வந்தவர்கள் அதிகளவு தொல்லை கொடுத்து வந்ததாக குறிப்பிடப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த நபர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. பிரியதர்ஷினிக்கு திருமணம் முடிந்து லிங்கராஜ் பட்டேல் என்ற கணவர் உள்ளார்.
அக்கம் பக்கத்தினர் தொல்லை
மேலும் இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரியதர்ஷினி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்கு அவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட தண்ணீர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மன உடைந்து போன பிரியதர்ஷினி குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆஸ்திரேலியா அரசாங்கம் 2 குழந்தைகளையும் தத்தெடுத்து கொண்டது. இது பிரிதர்ஷினிக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தனியாக சொந்த ஊர் திரும்பிய அவர், வீட்டிற்கு செல்லாமல் சவதத்தி அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தார்வார் புறநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.