தாடியை ஷேவ் செய்த மாணவர்கள் சஸ்பெண்ட் - ஷேவ் செய்யக்கூடாது என கல்வி நிறுவனம் உத்தரவு
தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் உள்ளது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ் செய்ததாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
தாடியை வெட்டுவது இஸ்லாமிய மதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.