கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.;
மும்பை,
3 நாட்கள் பயணமாக மராட்டிய மாநிலத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சென்றார். அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு ஜனாதிபதி முர்மு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (செவ்வாய்க்கிழமை) புனே சிம்பயோசிஸ் இன்டர்நேஷனல் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் மும்பையில் நடைபெறும் மராட்டிய மேல்-சபையின் நூற்றாண்டு விழாவில் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டு மராட்டியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.