கையில் வாளுடன் நடனமாடிய சிறுவர்கள் உட்பட 19 பேர் கைது

கையில் வாளுடன் நடனமாடிய சிறுவர்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-10-11 18:45 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 9-ந் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மிலாது நபி பண்டிகை கொண்டாட்டத்தின் போது வாலிபர்கள் கும்பல் கையில் வாளுடன் நடனமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.இந்த வீடியோ காட்சிகள் குறித்து கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பெங்களூருவில் நடந்த மிலாது நபி பண்டிகையின் போது வாலிபர்கள் கும்பல் கையில் வாளுடன் நடனம் ஆடியது தெரியவந்தது.

அதாவது சித்தாப்புரா அருகே சோமேஸ்வரா நகரில் மிலாது நபி பண்டிகையின் போது வாலிபர்கள் பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலி பரப்பி கையில் வாளுடன் நடனம் ஆடி இருந்தனர். அப்போது ஓவைசியின் சகோதரர் இந்துக்கள் குறித்து கூறிய கருத்துகளை இசையாக ஒலிபரப்பி வாலிபர்கள் கோஷம் எழுப்பி இருந்தனர். இதுதொடர்பாக சித்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பேரை கைது செய்து உள்ளனர். இதில் 14 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்