பா.ஜனதா பிரமுகரை கைது செய்யக்கோரி தலித் அமைப்பினர் போராட்டம்

தொழிலாளிகளை சிறை வைத்து சித்ரவதை செய்த பா.ஜனதா பிரமுகரை கைது செய்யக்கோரி தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-13 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா உன்சேஹள்ளி கிராமத்தில் காபி தோட்டத்திற்கு வேலைக்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த 14 பேர், வேலையை விட்டு செல்வதாக கூறியதால் அவர்களை சிறை வைத்து அடித்து சித்ரவதை செய்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அதில் அர்பிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளரும், பா.ஜனதா பிரமுகருமான ஜெகதீஷ் மற்றும் அவரது மகன் திலக் ஆகியோர் மீது பாலேஒன்னூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து தலித் அமைப்பினர், பாலேஒன்னூர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பா.ஜனதா பிரமுகர் ஜெகதீஷ், அவரது மகன் திலக்கை கைது செய்ய கோரியும், அவர்களது சொத்துகளை முடக்கம் செய்யவும் கோரிக்கை வைத்தனர். இதேபோல் இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலமும் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்