புதிய ஆடையும், கண்ணாடியும் அணிந்து வந்த நபர் மீது கும்பல் தாக்குதல், பெண் மானபங்கம் - குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

புதிய ஆடையும், கண்ணாடியும் அணிந்த நபர் மீது கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-02 05:46 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் மொடா கிராமத்தை சேர்ந்தவர் ஜிகர் ஷிகிலா. தலித் சமுகத்தை சேர்ந்த இவர் கடந்த செவ்வாய்கிழமை காலை தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிந்தார். ஜிகர் புதிய ஆடை அணிந்து, கண்ணாடி அணிந்து நின்றுகொண்டிந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்புத் என்ற சமுதாயத்தை சேர்ந்த நபர் ஜிகர் ஷிகாலாவை நோக்கி 'இப்போது மிகவும் உயரத்தில் பறக்கிறீர்கள்' என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர், அன்று இரவு ஜிகர் கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாற்று சமுகத்தை சேர்ந்த நபர்கள் சிலர் ஜிகர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.

ஜிகரை அந்த கும்பல் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை தடுக்க சென்ற ஜிகரின் தயாரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும், அந்த பெண்ணின் உடையையும் கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்