பால் கூட்டுறவு சங்கங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது - மத்திய மந்திரி அமித்ஷா

பால் கூட்டுறவு சங்கங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.;

Update: 2022-09-12 14:48 GMT

கிரேட்டர் நொய்டா,

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- பால் கூட்டுறவு சங்கங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பல்வேறு நிலைகளில் கிராமப்புற வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ஆர்கானிக் பால் பொருட்களின் சான்றிதழ், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக்காக நாங்கள் 3 கூட்டுறவு சங்கங்களை உருவாக்குகிறோம். அதற்கான முன்னோடித் திட்டம் அமுல் நிறுவனத்தால் உருவாக்கப்படும்.

அதற்கான ஏற்றுமதி நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்யப்படும். வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 2 லட்சம் புதிய பால் பண்ணைகளை உருவாக்குவோம் இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்