'தினத்தந்தி' புகார் பெட்டிகள்

சாலையில் வீணாக வழிந்தோடும் காவிரி தண்ணீர்

Update: 2022-05-22 17:09 GMT

சாலையில் வீணாக வழிந்தோடும் காவிரி தண்ணீர்

பெங்களூரு விதான சவுதாவையொட்டியுள்ள எம்.எஸ்.கட்டிடத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த கட்டிடம் அமைந்து உள்ள பகுதியில் உள்ள சாலையில் பூமிக்கு அடியில் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரி தண்ணீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சதாசிவய்யா, அம்பேத்கர் சாலை, பெங்களூரு.

நடைபாதை ஆக்கிரமிப்பு உணவகம் அகற்றப்படுமா?

பெங்களூரு ஹெப்பால் போலீஸ் நிலையம் முன்பு உள்ள நடைபாதையில் தள்ளுவண்டி உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்த தள்ளுவண்டி உணவகம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த நடைபாதை ஆக்கிரமிப்பு

தள்ளுவண்டி உணவகத்தை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ், ஹெப்பால், பெங்களூரு.

உடைந்து கிடக்கும் நடைபாதை சிமெண்டு சிலாப்பு

பெங்களூரு மாகடி ரோடு மெட்ரோ ரெயில் நிலையம் பகுதியில் உள்ள நடைபாதையில் சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. இரவு நேரத்தில் அந்த நடைபாதையில் நடந்து செல்பவர்கள் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கிடப்பதை கவனிக்காமல் செல்லும் போது சாக்கடைக்குள் தவறி விழும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க உடைந்து கிடக்கும் நடைபாதை சிமெண்டு சிலாப்புகளை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய முன்வர வேண்டும்.

- ரித்விக்குமார், மாகடி ரோடு, பெங்களூரு.

Tags:    

மேலும் செய்திகள்